Wednesday, January 23, 2013

ஆன்மீக வாழ்கையை நான் பேரின்பம் பெறாமல் போனால் அதற்காகப் புலனின்ப வாழ்கையை ஏன் நாட வேண்டும்? எனக்கு அமுதம் கிடைக்காமல் போனால்
அதற்காகச் சாக்கடை நீரையா நாடிச் செல்வது?
*******************************************************************************

இன்று உலகத்தில் காணப்படும் எல்லாவிதமான துன்பங்களுக்கும் காரணம், மனிதன் தன் வாழ்வின் லட்சியம் இன்பம் என்று நினைத்து, முட்டாள் தனமாக அதைத் தேடி அலைவது தான். வாழ்வின் லட்சியம் இன்பம் அல்ல, ஞானம் தான் என்று இறுதியில் அவனுக்குப் புரிகிறது.

*******************************************************************************

'ஓய்வு ஒளிவு இல்லாமல் வேலைகளைச் செய்து கொண்டே இரு. ஆனால், அந்த வேலைகளில் நீ கட்டுப் பட்டு விடாதே, அதற்குள் சிக்கிக் கொள்ளாதே' என்பதே கீதையின் உபதேசமாகும்.

*******************************************************************************

நாம் எஜமானனைப்போல் வேலை செய்ய வேண்டும், அடிமையைப் போல் அல்ல. சுதந்திரமாகக் காரியங்களைச் செய்! அன்புமயமாகக் காரியங்களை செய்!

சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள் :11